பூமியில் இருந்து வெகு தொலைவில் உள்ள நட்சத்திரக் கூட்டங்களின் தொகுப்பு

விண்வெளியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள ஹபிள் தொலைநோக்கி மூலம் பல்வேறு பிரபஞ்ச அதிசயங்கள் படம் பிடிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்தத் தொலைநோக்கி சமீபத்தில் COMA விண்மீன் பேரடையை படம் பிடித்துள்ளது. இங்கு கிட்டத்தட்ட ஆயிரம் கேலக்சிகள் இருக்கலாம் என யூகிக்கப்பட்டுள்ளது . இந்த விண்மீன் பேரடை பூமியிலிருந்து 300 மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ளது. இங்கு கரும்பொருளின் இருப்பு செறிந்திருக்கலாம் என அனுமானிக்கப் பட்டு , ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கேலக்ஸி தொகுப்புகளில் ஒரு பகுதியை இங்கு படமாகக் காணலாம்.

விண்மீன் பேரடை

Image credit : NASA

Advertisements

5 thoughts on “பூமியில் இருந்து வெகு தொலைவில் உள்ள நட்சத்திரக் கூட்டங்களின் தொகுப்பு

 1. (இன்ப ஊற்று என நிறைந்த இறைவா எனும் போதிலே
  ஏற்படும் ஓர் இன்பமதை எவ்வாறு சொல்வேன்
  நன்மை தரும் நவ கோள்கள்) நட்சத்திரக் கூட்டம்
  நான் அகத்தே காணுகின்றேன் நடனமாடும் காட்சியாய்
  உன் பெரிய பேரியக்க உவமையற்ற ஆற்றலால்
  உலகங்கள் அத்தனையும் உருளுதே ஓர் கொத்துப்போல்
  தன்மயமாய்த் தான் அதுவாய்த் தவறிடாதியக்கும் உன்
  தன்மையினை எண்ண எண்ண தவமது ஆனந்தமே.”

  .
  -இறையுணர்வில் எழும் பேரின்பம்…
  தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

  Liked by 1 person

 2. அய்யா தங்கள் பதிவுகளை நான் படித்து உள்ளேன் ‌‌‌தாங்கள் மிக தெளிவாக நிறைய ‌‌‌பதிவிட்டு உள்ளீர்கள் … …

  Liked by 1 person

 3. இங்கு எல்லாவற்றையும் இயக்குவது குருவருளே .ஒரே ஒரு குருதான் இங்கு இருக்க முடியும் .ஒரு குருவுக்கு நிகர் அவர் மட்டுமே . வேறு யாரும் அவருக்கு நிகராக வர முடியாது. குரு என்னும் மிகப்பெரும் பேரொளியை உள்வாங்கி சிறிதளவே வெளிப்படுத்தும் கண்ணாடி போலவே நான். பல மனவளக்கலை ஆசிரியர்கள், குரு அருளை உணர்ந்து வாழ்ந்து ,வழிகாட்டி வருகிறார்கள். எதிரொளிக்கும் கண்ணாடி பெரியதா அல்லது இதற்கு காரணமாக இருக்கும் சூரியன் பெரியதா ?. சூரியனே பெரிது. இங்கு வேதாத்திரியர் எனும் ஒரே ஒரு குரு மட்டுமே. அவரை பிரதிபலிக்கும் கண்ணாடிகள் மனவளக்கலை ஆசிரியர்கள். குருவே இங்கு அனைத்தையும் நிகழ்த்துகிறார்.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s