கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் ஏவிய நிமிடங்களில் தொழில்நுட்பக் கோளாறுகளால் விபத்துக்குள்ளாகியது.
ஆயினும் அதில் இருந்த விண்வெளி வீரர்கள் பத்திரமாக அவசரகால தொழில்நுட்ப உதவியுடன் தரை இறங்கி விட்டனர் .
ரஷ்ய விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு பல்வேறு விமர்சனங்கள் வந்தது .அடுத்ததாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவார்களா மாட்டார்களா என்றெல்லாம் விமர்சனம் எழுந்தது. இவற்றையெல்லாம் தாண்டி அடுத்த விண்கலத்தை ரஷ்ய விண்வெளி ஆய்வு நிலையம் தயார் செய்து விட்டது .ஏவுவதற்கு தயாராக விண்கலம் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு விட்டது .அதனை ரஷ்ய விண்வெளி ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்வதை இந்த காணொளியில் காணலாம்.
கடும் முயற்சி, தளராத போராட்டம் இவை அடுத்த கட்ட வெற்றிகளுக்கு எடுத்துச் செல்லும் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கூடுதல் தகவலாக விண்ணில் ஏவப்பட்ட விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மனிதர்களால் முடியாது என்று எதுவும் இல்லை என்று உறுதிபடுத்திக்கொள்ள முடிகிறது. நம் இளைய சமுதாயத்தினருக்கு இந்த தகவல்கள் நிச்சயமாக போய்சேரவேண்டும். நாம் கல்வியில் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை உணரச்செய்யும். மிக மிக அருமையான இந்த தங்கள் தொகுப்புக்கு நன்றி. வாழ்க வளமுடன்
LikeLiked by 1 person
வாழ்க வளமுடன்
LikeLike
தொடர்ச்சியாக பார்த்ததில் கிடைத்தவை…
Soyuz MS-11 docking:
Soyuz MS-11 hatch opening:
LikeLiked by 1 person