மீண்டும் பிரகாசத்தைப் பெற்றுவரும் பெட்டல்கியூஸ் நட்சத்திரம்

பெட்டல்கியூஸ் நட்சத்திரம் அல்லது திருவாதிரை நட்சத்திரம் வெடித்து சிதறும் என்று சில நாட்களுக்கு முன்பு கணிப்புகளும் செய்திகள் வரத் துவங்கி இருந்தன. பல்வேறு அறிவியல் அறிஞர்கள் பல்வேறு கருத்துக்களை இந்த நிகழ்வு குறித்து தெரிவித்து வந்தனர். ஒருவேளை இந்நட்சத்திரம் வெடித்து சிதறினால் கிட்டத்தட்ட மூன்று மாதம் வரை இரவு முழுவதும் பகல் போன்று வெளிச்சமாக இருக்கும் என்றெல்லாம் கூட கணிப்புகள் வெளியாகி இருந்தன. இது குறித்து பல மக்கள் கவலைகள் கூட தெரிவித்து இருந்தனர்.

பிரகாசம் குறைந்துவரும் திருவாதிரை . Image credit : NASA , ESO, M. Montargès et al.

எனினும் இந்நட்சத்திரத்தை ஆய்வு செய்து வரும் அறிஞர்கள், தற்போது இந்த நட்சத்திரத்தின் ஒளிரும் தன்மை கூடி வருவதாக கணித்துள்ளனர்.  இதற்கு முன்னதாக இந்நட்சத்திரம் தனது வெளிச்சத்தை இழந்து வருவதாக ஆய்வுகள் தெரிவித்தன. தற்போது மீண்டும் அது தனது பழைய வெளிச்சத்தைப் பெற்று வருகிறது. இன்று ஏப்ரல் 14 2020 வந்த கணக்கீட்டின்படி இந்த நட்சத்திரம் கிட்டத்தட்ட 92 சதவிகிதம் தனது வழமையான வெளிச்சத்தை பெற்றுவிட்டது

இந்த கணிப்பு ஒரு நாள் முன்னதாக ஏப்ரல் 13 2020 இல் வெளிவந்தது. இதில் திருவாதிரை நட்சத்திரம் தனது வழமையான வெளிச்சத்தில் 87 சதவீதத்தை திரும்ப பெற்றுள்ளது என்று தெரிவிக்கிறது.

இந்த கணிப்பு சில நாட்கள் முன்னதாக ஏப்ரல் 3 2020 இல் வெளிவந்தது. இதில் திருவாதிரை நட்சத்திரம் தனது வழமையான வெளிச்சத்தில் 68 சதவீதத்தை திரும்ப பெற்றுள்ளது என்று தெரிவிக்கிறது.

https://twitter.com/betelbot/status/1245427352114360320?s=19

இவற்றிலிருந்து நாம் புரிந்து கொள்வது என்னவெனில் பெட்டல்கியூஸ் அல்லது திருவாதிரை நட்சத்திரம் தனது பிரகாசத்தை மீண்டும் பெற்று வருகிறது எனவே தற்போது உள்ள சூழ்நிலையில் வெகு சமீபத்தில் இது வெடித்து சிதறும் என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

மேலும் இது போன்ற பல செய்திகளை தெரிந்து கொள்ள எமது டெலகிராம் சேனலையும் பார்வையிடுங்கள்

https://t.me/tamilphysics

பிரபஞ்ச வலைப்பின்னல்

வானிலிருந்து நிறுத்தப்பட்டுள்ள ஹப்பிள் தொலைநோக்கி மூலம் பல புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஆச்சரியத்தக்க வகையிலும் பல புதிர்களை உள்ளடக்கியதாகும் தரவுகளை வெளிப்படுத்துகின்றன .இத்தொலைநோக்கி மூலம் ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. பிரபஞ்ச வலைப்பின்னல் என்னும் தலைப்பில் வெளியாகியுள்ள புகைப்படம் ஒரு சூப்பர் நோவா வெடிப்பின் மீதத்தைப் படம்பிடித்துள்ளது. ஒரு காலத்தில் நட்சத்திரமாக இருந்தது , பின்னாட்களில் இத்தகைய அமைப்புகளை தருகிறது என்றும் கூறியுள்ளது.

supernova

Credit: ESA/Hubble, NASA

சூப்பர் நோவா வெடிப்புகள் நட்சத்திரம் ஒன்றின் இறப்பின் காரணமாக உருவாகிறது. இங்கு அவ்வாறு வெடித்த நட்சத்திரம் வலைப்பின்னல் போல அமைந்துள்ளதை இப்படத்தில் காணலாம்.