பூமியை நோக்கி வரும் விண்கல் புகைப்படம்

பூமியை நெருங்கி வரும் விண்கல் பற்றி கடந்த வாரம் ஒரு பதிவில் சொல்லி இருந்தோம்.

https://physicistnatarajan.wordpress.com/2018/12/06/comet-46p-wirtanen-passes-earth/

அவ்விண்கல்லை தொலைநோக்கி மூலம் புகைப்படம் எடுத்துள்ளனர் . விண்கல் அமெரிக்காவில் உள்ள ஒரு தொலைநோக்கியின் மூலம் நாசாவினால் படம்பிடிக்கப்பட்டுள்ளது .அதை இப்படத்தில் காணலாம்.

Credit : NASA

இன்று 16-12-2018 பூமிக்கும் நிலவுக்கும் இடையே உள்ள தூரத்தை விட 30 மடங்கு அதிகமான தூரத்தில் இவ்விண்கல் பூமியை கடந்து செல்லும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்

பூமிக்கு அருகில் வர இருக்கும் மிகப்பெரிய விண்கல்

பூமிக்கு அருகில் மிகப்பெரிய விண்கல் ஒன்று அடுத்த வாரம் வர இருக்கிறது . இதன் பெயர் Comet 46P/Wirtanen.
இதுவரை பல்வேறு விண்கல் பூமிக்கு அருகில் வந்து சென்றாலும் , இவ்விண்கல் ஒப்பீட்டளவில் சற்று நெருக்கமாகவே பூமியை நோக்கி வருகிறது .டிசம்பர் 16ம் தேதி இந்த விண்கல்லை வானத்தில் பார்க்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் .

இதனால்பூமிக்கு ஏதாவது பாதிப்பு இருக்குமா??

இருக்காது என கணித்துள்ளனர் .மிகப் பெரிய கல்லாக இருந்தாலும் பூமியை விட்டு சற்று தொலைவில அல்லது பூமிக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வண்ணம் கடந்து செல்லும் ,என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். டிசம்பர் 16ஆம் திகதி இரவு, வானம் மேகம் இல்லாதபட்சத்தில் காண முடியும் என்கின்றனர்.

இதைப்பற்றிய விரிவான செய்தி இங்கு காணலாம்

https://www.skyandtelescope.com/astronomy-news/comet-46p-wirtanen-approaches-earth/

விண்கல்லைத் தொட்ட ஜப்பானிய ரோபோ விண்கலம்

ஜப்பானின் Hayabusa2 விண்கலம் Ryugu விண் கல்லைத் தொட்டுள்ளது. அடுத்த 18 மாதங்களுக்கு தன்னுடைய ஆய்வை மேற்கொள்ளும் உயிரகள் உருவாகிருக்கக்கூடிய சாத்தியக் கூறுகளையும் அதற்குத் தேவையான மூலக்கூறுகளையும் இந்த விண்கலம் ஆராய்ச்சி செய்யும் . மூன்று ஆண்டுகள் பயணம் செய்து இந்த ரோபோவானது மின் கல்லை எட்டியுள்ளது . இதிலிருந்து பெறப்படும் மாதிரிகள் உயிர்கள் உருவாக காரணமாக இருந்த சூழலை ஆய்வு செய்ய உதவும். ஜப்பானிய விண்வெளி ஆய்வு நிலையம் இதனை உறுதி செய்துள்ளது.

http://global.jaxa.jp/projects/sat/hayabusa2/topics.html#topics12192