நமது புது வலைத்தளம்

நமது தளத்தை பின்தொடரும் அனைவருக்கும் வணக்கம். தற்போது நமது தளத்தில் நீங்கள் வானியல் குறித்த பல்வேறு தகவல்களை தெரிந்து கொண்டு வருவீர்கள் என நம்புகிறேன். இந்த தளத்தை இன்னும் மேம்படுத்தும் விதமாக நமது தளம் புதிய முகவரியிலும் இயங்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் . இந்த புதிய தளத்திற்கான முகவரி palveli.com. palveli.com என்ற தளமாகவும் நமது தளம் இயங்கும். நண்பர்கள் அனைவரும் இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். எப்போதும் போல் உங்களது ஆதரவை விரும்புகிறேன்.

நட்புடன்

நடராஜன் ஸ்ரீதர்

10 கோடி நட்சத்திரங்களின் ஊடாகப் பறந்து செல்வோம் வாருங்கள்

வானில் எத்தனையோ நட்சத்திரங்கள், நட்சத்திரக் கூட்டங்கள் சிதறிக்கிடக்கின்றன. நாம் பால்வழி அண்டம் என்ற நட்சத்திரக் கூட்டத்தில் இணைந்துள்ளோம். நமக்கு அருகாமையில் இருக்கும் நட்சத்திர தொகுதி ஆண்ரோமேடா நட்சத்திர தொகுதி ஆகும்.

image credit : NASA

இந்த நட்சத்திர தொகுதியை ஹப்பிள் வானியல் தொலைநோக்கி விண்வெளியிலிருந்து படம்பிடித்துள்ளது. பூமியிலிருந்து காணக் கிடைக்காத பல அற்புதமான தகவல்கள் இந்த ஹப்பிள் தொலைநோக்கியின் மூலம் பெறப்படுகின்றன. ஹப்பிள் தொலைநோக்கி வாயிலாக காணும்போது ஆண்ரோமேடா கேலக்ஸியின் 10 கோடி நட்சத்திரங்கள் காணக்கிடைக்கின்றன. அது பற்றிய வீடியோ தொகுப்பை நாசாவின் தரவுகளிலிருந்து பெறமுடியும். அவற்றை இங்கு வீடியோவாகக் காணலாம்.

மேலும் இது போன்ற பல சுவாரசியமான தகவல்களைத் தெரிந்து கொள்ள எமது டெலகிராம் சேனலையும் பார்வையிடுங்கள்

https://t.me/tamilphysics

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஹபிள் தொலைநோக்கி

ஹபிள் தொலைநோக்கி  1990 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. ஏவப்பட்ட நாள்முதல் பிரபஞ்சத்தை பல்வேறு கோணங்களில் படம் எடுத்து வருகிறது. பிரபஞ்சத்தைப் பற்றிய புரிதலையும் பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தையும் புரிந்துகொள்ள ஹபிள் தொலைநோக்கி பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது.

ஹபிள் தொலைநோக்கி

பூமியில் தரைப்பகுதியில் இருந்து விண்வெளியைப் பார்க்கும் தொலைநோக்கிகள் காற்று மண்டலத்தின் காரணமாக பல்வேறு விஷயங்களை இழந்துவிடுகின்றன. அதைத் தாண்டி விண்ணில் நிலை நிறுத்தப்பட்ட முதல் தொலைநோக்கி ஹபிள் தொலைநோக்கி ஆகும். கிட்டத்தட்ட ஐந்து முறை இது பழுது பார்க்கப்பட்டு தற்போதும் மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது. இந்த ஹபிள் தொலைநோக்கியின் ஒரு புகைப்படம் பிரபஞ்சத்தைப் பற்றிய நமது புரிதலையே மாற்றியிருந்தது. அந்த புகைப்படம் இங்கே உள்ளது.

Image credit: NASA, ESA, G. Illingworth, D. Magee, and P. Oesch (University of California, Santa Cruz), R. Bouwens (Leiden University), and the HUDF09 Team)


இது  பிரபஞ்சத்தின் அடி ஆழத்தை தேடிய புகைப்படம் ஆகும். பல்வேறு நட்சத்திரக் கூட்டங்களையும் கேலக்சிகளையும் இங்கு காணமுடிகிறது. 30வது பிறந்தநாளை வெற்றிகரமாக கொண்டாடும் ஹபிள் தொலைநோக்கிக்கு நமது தளத்தின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் . பல்வேறு விஞ்ஞானிகள், ஆய்வு நிறுவனங்கள் ஆகியவை ஹபிள் தொலைநோக்கி தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமீபத்திய ஹபிள் படங்களை இங்கு தொகுப்பாக காணலாம்.

மேலும் இது போன்ற பல சுவாரசியமான தகவல்களைத் தெரிந்து கொள்ள எமது டெலகிராம் சேனலையும் பார்வையிடுங்கள்

https://t.me/tamilphysics