பிரபஞ்சத்தின் தோற்றம் -ஆய்வுக்கட்டுரை

பிரபஞ்சத்தின் தோற்றத்தை பற்றிய நம்முடைய ஆய்வுக்கட்டுரை வல்லமை மின்னிதழில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. கீழ்காணும் இணைப்பு வாயிலாக அவற்றை அணுகலாம்..

http://www.vallamai.com/?p=89952

வாழ்க வளமுடன்

நடராஜன்

Advertisements

நிலவின் பின்பக்கம் சைனாவின் விண்கலம்

சைனா அனுப்பிய விண்கலம் வெற்றிகரமாக நிலவின் பின்பக்கத்தை தொட்டுள்ளது. நிலவின் பின்பக்கம் பூமியிலிருந்து காண முடியாத பகுதியாகும். அப்பகுதியை ஆய்வு செய்ய சைனா தனது ரோபோ விண்கலத்தை அனுப்பியுள்ளது. Chang’e 4 எனப்படும் அந்த ரோபோ விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ரோபோ தனது முதல் புகைப்படத்தை எடுத்து அனுப்பியுள்ளது. அப்படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

CNSA Photo

பூமியை நோக்கி வரும் விண்கல் புகைப்படம்

பூமியை நெருங்கி வரும் விண்கல் பற்றி கடந்த வாரம் ஒரு பதிவில் சொல்லி இருந்தோம்.

https://physicistnatarajan.wordpress.com/2018/12/06/comet-46p-wirtanen-passes-earth/

அவ்விண்கல்லை தொலைநோக்கி மூலம் புகைப்படம் எடுத்துள்ளனர் . விண்கல் அமெரிக்காவில் உள்ள ஒரு தொலைநோக்கியின் மூலம் நாசாவினால் படம்பிடிக்கப்பட்டுள்ளது .அதை இப்படத்தில் காணலாம்.

Credit : NASA

இன்று 16-12-2018 பூமிக்கும் நிலவுக்கும் இடையே உள்ள தூரத்தை விட 30 மடங்கு அதிகமான தூரத்தில் இவ்விண்கல் பூமியை கடந்து செல்லும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்

செவ்வாயில் செல்ஃபி

செல்பி ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு வளர்ந்து விட்ட இந்த காலத்தில் தவிர்க்க முடியாத ஒரு விஷயம். கடந்த வாரம் செவ்வாயில் நாசா அனுப்பிய ரோபோ இறங்கியிருந்தது பற்றி பேசியிருந்தோம். அது அங்கு தங்கி அங்கு உள்ள நிலப்பரப்பை ஆய்வு செய்து வருகிறது .தற்போது தன்னைத்தானே ஒரு செல்பி எடுத்து அந்த ரோபோ அனுப்பி உள்ளது. அதனை இங்கு காணலாம்.

Image credit : NASA

நிலவின் மறுபக்கம்

தமிழ் கதாநாயகர்களின் பொதுவான டயலாக்..

“என் ஒரு பக்கத்தை மட்டும்தான் காட்டியிருக்கிறேன் ,எனக்கு இன்னொரு பக்கம் இருக்கு ” இதுபோன்ற டயலாக்குகளை பெரிய கதாநாயகர்களின் படங்களில் கைதட்டி ரசிக்கிற ரசிகர் கூட்டம் உண்டு .இதே மாதிரி நம்முடைய பூமியின் துணைக்கோள் நிலவு செயல்படுகிறது .அதாவது நிலவு பூமிக்கு தனது ஒரு பக்கத்தை மட்டுமே எப்போதும் வெளிப்படுத்தும் .மற்றொரு பக்கம் பூமியிலிருந்து காணவே முடியாது. நாசாவின் Lunar Reconnaissance Orbiter ஆய்வுக்கலம் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் நிலவின் பின்பகுதி பற்றிய குறிப்புகள் தெரியவந்துள்ளது .இங்கு இப்படம் இணைக்கப்பட்டுள்ளது .நிலவின் பின் பகுதி மிக அதிகமான மேடு பள்ளங்களால் நிறைந்துள்ளது .இதற்கு காரணம் விண்கற்கள் அதிகளவில் நிலவின் மேற்பரப்பில் வந்து மோதுவதே காரணம் ஆகும்.

Image credit : NASA

விண்வெளியின் ஆழத்தை நோக்கி வாயேஜர் விண்கலம்

நாசாவினால் ஏவப்பட்ட வாயேஜர்-2 விண்கலம் சூரிய குடும்பத்தை தாண்டி விண்வெளியில் ஆழத்தை நோக்கி பயணிப்பதை நாசா உறுதி செய்துள்ளது. 1977ல் அமெரிக்காவிலிருந்து விண்வெளியை நோக்கி ஏவப்பட்ட செயற்கைக்கோள் ஆகும். இது பூமியில் இருந்து கிளம்பி செவ்வாய், வியாழன் ,சனி ,யுரேனஸ் ,நெப்டியூன், புளூட்டோ ஆகிய கோள்களைப் படம் எடுத்து பூமிக்கு அனுப்பி இருந்தது. தற்போது அவற்றையெல்லாம் தாண்டி சூரிய குடும்பத்திற்கு அப்பாலும் வெகுவேகமாக வாயேஜர்-2 விண்கலம் பயணிக்க ஆரம்பித்துள்ளது. 40 ஆண்டுகளுக்கு பிறகும் இதன் பயணம் வெற்றிகரமாக தொடர்கிறது.

ஒரு அதிசயிக்கத்தக்க விஷயம் என்ன தெரியுமா? நம் கையில் இன்று வைத்திருக்கும் ஸ்மார்ட்போன்கள் வாயேஜர்-2 விண்கலத்தின் நினைவுத்திறனை விட 200 மடங்கு அதிகமான சேமிப்பு திறன் கொண்டது.

வாழ்க வளமுடன்

நடராஜன்

பகுதி அளவு சூரிய கிரகணம்

சூரியகிரகணம் ஆண்டுதோறும் நிகழ்கிறது. சில சமயங்களில் முழுமையாகவும் சில சமயங்களில் பகுதிகளாகவும் நிகழ்கிறது.

இங்கு வெளியிடப்பட்ட படம் பிரேசிலில் எடுக்கப்பட்டது.
இதில் பகுதியளவு சூரிய கிரகணத்தினைக் காணலாம். பிப்ரவரி 26, 2017 நிகழ்வு இக்கிரகணம்

Image credit:

http://www.astrobin.com/full/285327/0/?nc=user

வாழ்க வளமுடன்
நட்புடன்
நடராஜன்