செவ்வாய் கிரகத்தின் தரைப் பகுதி

செவ்வாய் கிரகம் நான்காவது சுற்று வட்ட பாதையில் சூரியனைச் சுற்றி வருகிறது. செவ்வாய் கிரகத்தின் அமைப்பை ஆராய செயற்கைக்கோள்கள்களும், ரோவர்களும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

செவ்வாய் கிரகத்தின் தரைப் பகுதியை ஆராய அனுப்பப்பட்ட ரோவர்களில் ஒன்றான கியூரியாசிட்டி ரோவர் அதன் தரைப் பகுதியை பற்றிய விவரங்களை விளக்கமாக மற்றும் நுணுக்கமாக தந்தது. அவற்றில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கணினி மூலம் பெறப்பட்ட படங்களை நாசா சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறது. அத்தகைய படங்களில் ஒன்றை இப்போது நாம் காணலாம்.

செவ்வாய் கிரகம்
credit NASA

செவ்வாயின் தரைப் பகுதி கரடுமுரடாக இருப்பதை இந்த படத்தின் வாயிலாகக் காணலாம். மேலும் செவ்வாயின் தரைப் பகுதி பல கோடி வருடங்களாக பாதிக்கப்படாமல் இருப்பதையே இந்த படம் வாயிலாக காணலாம்.

வாசிக்க சில நல்ல புத்தகங்கள்

விண்வெளி வீரர்கள் என்ன சாப்பிடுகிறார்கள்?: விண்வெளியின் அதிசயங்கள்….. (Tamil Edition)

மேலும் இது போன்ற பல சுவாரசியமான தகவல்களைத் தெரிந்து கொள்ள எமது டெலகிராம் சேனலையும் பார்வையிடுங்கள்


https://t.me/tamilphysics